எமக்காக உழைத்த
உயிர்கள்.
எமக்காக கற்பித்த
ஜீவன்கள்.
எமக்காக கற்ற
மூளைகள்.
உயரம் நோக்கிய
பயணத்தில்
எம்மைச்
செலுத்திவிட்டு
தாம் மட்டும்
தரையிலேயே
தங்கிவிடும் ஏணிகள்.
எம்மைத்
தரை சேர்த்துவிட்டு
தாம் மட்டும்
கரை சேரா
தோணிகள்.
எம் ஆசான்கள்.
வாழ்த்துதல் தகுமா?
வணங்குதலே முறை.
வணங்குகிறேன்.