Saturday, 23 December 2017

KB

இது ஒரு
செல்லுலாய்ட் சிற்பியின்
அமரம்.

எவர் நடித்தாலும்
அவர் இயக்கியதால்
அவர் படமாயின.

புரட்சி என்பதை
பட்டங்களில்
கொள்ளாமல்
கருத்திலும்
கொண்டவர்.

தன்னை
யாருக்காகவும்
இழக்காத
நிஜ
சுயமரியாதையர்.

துணிவுக்கு
துணை நின்றவர்.

பெண்ணியத்தின்
ஆண் காவலர்.

புதுமைக்கு
முதல் கட்டியம்
அவருடயது.

எல்லார் இறப்பும்
இழப்பன்று.

அனுதாபம்
குடும்பத்திற்கு.

ஆறுதல்
நமக்கு.

இழப்பு
சினிமாவுக்கு.

No comments:

Post a Comment