Thursday, 29 October 2020

யாதெனில்-5

/காதல்/
காதல் என்பது 
புரிதல்.
காதல் என்பது
அறிதல்.

காதல் என்பது
தெளிதல்.
காதல் என்பது
கனிதல்.

காதல் என்பது
உணர்தல்.
காதல் என்பது
உணர்த்தல்.

காதல் என்பது
வாழ்தல்.
காதல் என்பது
வாழ்வித்தல்.

காதல் என்பது
ஆதல்.
காதல் என்பது
ஆக்கல்.

காதல் என்பது
வியாபித்தல்.
காதல் என்பது
யாதுமாதல்.

ஆயின்,
காதல் என்பது
ஈதலும் அன்று.
இரத்தலும் அன்று.

Thursday, 8 October 2020

தாகம்

என் கோப்பை
நிறையத் தேநீர்.

வழிவதற்கு முன்பாக ஊற்றுவதை ஜென் துறவி நிறுத்தி விட்டார்.

அருந்தி முடித்த பின்
கோப்பை காலியானாலும்
மனது நிறையவில்லை.

எனக்கு தாகம் தவிக்கிறது.
அந்தக் கோப்பை
இன்னும் காலியாகத்தான்
இருக்கிறது.

கோப்பையை மீண்டும் 
நிறைத்துக் கொள்வதா?
இல்லையா?
என்று நான் முடிவு செய்யும் முன்பே ஜென் துறவி போய்விட்டார்.

என் வீட்டுச் சுவரில் 
ஓஷோ-வோ 
சிரித்துக் கொண்டே
இருக்கிறார்.

உயிர் உண்டு...

மறைக்காத இமைகளும் இல்லை.
மறக்காத இதயமும் இல்லை.

கலையாத கனவும் இல்லை.
கலைக்காத நினைவும் இல்லை.

ஏங்காத உள்ளமும் இல்லை.
ஏய்க்காத உறவும் இல்லை.

நினைக்காத நாளும் இல்லை.
கலங்காத தினமும் இல்லை.

நான் இல்லாமல் அவள் உண்டு.
அவள் இல்லாமல் நானும் உண்டு.

உடல்களில் உயிர் உண்டு.
உயிர்தனில் ஜீவன் உண்டோ?