இரத்த தானமா,
எம்மதமும் சம்மதம்.
கண் தானமா
எம்மதமும் சம்மதம்.
உறுப்பு தானமா,
எம்மதமும் சம்மதம்.
நட்பு வட்டமா,
எம்மதமும் சம்மதம்.
கேளிக்கை விருந்தா,
எம்மதமும் சம்மதம்.
சின்ன வீடா,
எம்மதமும் சம்மதம்.
லஞ்சல் ஊழலா,
எம்மதமும் சம்மதம்.
விபச்சாரமா,
எம்மதமும் சம்மதம்.
மற்றபோதெல்லாம்?
என் மதம்; தனி மதம்.
ஐந்தறிவு ஜந்துக்கள்
கடவுளைப் படைக்கவில்லை.
அதனால் அவை
மதம் பிடித்து
அலைவதில்லை.
கேவலம்.
நதிக்கரைகளில் பிறந்த
மனித நாகரிகத்திற்கு
இன்னும் அகலவில்லை
அழுக்கு.
No comments:
Post a Comment