Sunday, 23 April 2017

நீளும் நிழல்

சாய்ந்தறியா மடியும்
தாங்கியிராத் தோளும்
புள்ளியாய்த் தேய்ந்து
மெல்ல மறைந்தன.

விஷமாய்க் கனன்ற
வார்த்தைகளும்
தொலைவில்
ஒலித்துக் கலைந்தன.

முதுகு காட்டி
திரும்பி நிற்கிறது
இருந்தும் இல்லாத
நேசம்.

அனலின் உக்கிரம்
முகத்தை அறைய
ஓடி ஒளிகிறது
என் மெய்.

மெளனமும் சேர்ந்து
யாதும் குத்திக்
கிழிக்க தளர்ந்தது மனம்.

என் பயணத்தின்
நடத்துநர் இனி நான் மட்டுமே.

என் பாதையின்
நீளம்
என் மனதின்
அளவு மட்டுமே.

மெல்ல நடக்கிறேன்.
சுமை குறைந்த
பயணியாய்.

இறைவன் உயர்த்தும்
அபயக் கரங்களின்
நிழல் நீண்டு
என்னை என்றேனும்
தழுவக் காத்தபடி...

No comments:

Post a Comment