அதிகாலை நடைப்பயிற்சி
அரை மனதோடு
துவங்கும்.
உறுத்தாத இளங்கதிர்
மேனி தழுவ
சோம்பல் மெல்ல
விடை பெறும்.
இதமான காற்று
முகம் தொட்டுப் போக
உடலெங்கும்
புத்துயிர் பரவும்.
கீச் கீச் என
சோகம் கலவாது
பேசிக் குலவும்
அமனித இனங்கள்
வாழுங்கலை பகரும்.
முகிலினம்
முன்னிரவில்
நிலவு கூடிய
நினைவோடு
நாணிச் சிவக்கும்.
பறந்து திரிந்தும்
தனக்கென
எல்லைகளை வகுக்காத
பறவைகள்
மனிதன் மறந்த
பாடங்களை
மறக்காது புகட்டும்.
வீடு திரும்புகையில்
உடலோடு மனதும்
சுகமாகும்.
இப்போது புரிகிறது.
என் உலகத்தின்
அளவு என்பது
என் இதயத்தின்
அளவே.
I love nature
ReplyDeleteI love early morning walking
Hiking running and biking
My pathi doe the enjoy any of these.
So I couldn't do it alone