நேற்று மாலை;
ஷ்வேத்து, என்னடா பண்ற?
படிக்கறேம்ப்பா...
என்னடா படிக்கற?
மேத்பா, quadratic equations.
அப்டின்னா?
போங்கப்பா, உங்களுக்கு அதெல்லாம் புரியாது.
கிர்ர்ர்...
அது சரி, உங்க கைல என்ன புக்?
சைக்காலஜிடா...கரஸ்ல பண்றேன்லடா செல்லம்...
இந்த வயசுல உங்களுக்கு பிஜியெல்லாம் தேவையா? அந்த நேரத்துல என் பாடத்தைப் படிச்சு எனக்காவது சொல்லித்தரலாம்ல?
அதுவும் பண்றேனேடா.....
(மைன்ட் வாய்ஸ்) உன் பாடம் எல்லாம் sounds Latin and Greek to me....
என்னப்பா சத்தமே காணோம்...
எம்எஸ்சி அப்ளைட் சைகாலஜில நா பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிக்காட்டல.....
(உள்ளிருந்து குரல்): இப்பவே வேற பெயர் ரெடி பண்ணி வச்சுக்கோங்க...பின்னால மாத்திக்கனும்ல..
(நற...நற....) அதையும் பாப்போம்...
அப்பா, அதைவிடுங்க...என்ன படிக்கறீங்க?
நானா? ஹிப்போகேம்பஸ், காக்னிடிவ் பர்ஸ்பக்டிவ்....
சரி, சரி,.....ஒழுங்காப் படிங்க....நாளைக்கு சாயங்காலம் நான் வந்து நீங்க படிச்ச போர்ஷன்லேர்ந்து கேள்வி கேட்பேன்..
ஙே....
-----
( காலை ஐந்து மணிக்கு எழுந்து உளவியல் படிக்கும் சோகம் ஒரு தனிக் கதை)
Excellent
ReplyDeleteஆகா...
ReplyDeleteஇதுவும் மகளதிகாரம் தான்
ஆகா...
ReplyDeleteஇதுவும் மகளதிகாரம் தான்
ஆகா...
ReplyDeleteஇதுவும் மகளதிகாரம் தான்