Wednesday, 13 July 2016

காயத்ரி மந்திரம்-தமிழாக்கம்

காயத்ரி மந்திரம் பற்றி வேறு காரியத்திற்காக பல பதிவுகளைத் தேடிக்கொண்டிருந்த நண்பர் என்னையும் கேட்டார்.

நான் அவரிடம் இரண்டு விஷயங்களைச் சொன்னேன்.

முதலாவது, காயத்திரி என்பது செய்யுள்  வடிவத்தைக் குறிக்கும். Vedic or poetic meter.

இரண்டாவது, காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதியால் செம்மையாகச் செய்யப்பட்டுள்ளது.

நண்பர் இரண்டுமே தனக்கு புதிய தகவல் என்றார். இத்தனைக்கும் அவரது வாசிப்பு பரந்தது.

முதலாவது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது தகவல் நமக்குத் தெரியவில்லை என்றால் அது நமது குறை.

பாரதியை நாம் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்று தான்  தோன்றுகிறது.

வாழ்க்கையின் எல்லா கட்டத்திற்கும் நமக்குச் சொல்வதற்கு என்று பல செய்திகள் பாரதியின் எழுத்துக்களில் உண்டு.

தாகமுள்ள குதிரைகள் தான் தீரத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

காயத்ரி மந்திரத்திற்கு பாரதி தந்த தமிழாக்கம்  இது:

"செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்; அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"( பாஞ்சாலி சபதம்: 153)

No comments:

Post a Comment