தலையில் அறிவியலும்
இருதயத்தில் நேயமும்
கொண்ட ஜீவன்.
கனவுகளை
அஸ்திவாரமாக
ஆக்கக் கற்பித்த
ஆசான்.
இளைய இந்தியனை
இரும்பாய் ஈர்த்த
காந்தம்.
அக்கினிச் சிறகுகளால்
உயரப் பறந்த
விஞ்ஞானி.
முதல்மகனாலும்
எளிமை துறக்காத
தலைமகன்.
இறுதி வரை
ஓயாது உழைத்த
இதயன்.
ஓ, ஒரு திங்களன்று
இருளை
விட்டுச்சென்றது
இந்த
ஞான ஞாயிறு.
இனி எங்ஙனம்
கலாம்
தென்படுவார்?
கண்ட கனவுகள்
நனவானால்
மரித்தாராயினும்
அமரரை
நினைக்"கலாம்".
பார்க் "கலாம் " .
Super
ReplyDelete