அவரது தோள்களின்
உயரத்தில்
எனது பார்வை விரிந்தது.
அவரது கண்டிப்பின்
வழியில்
என் வாழ்வு சிறந்தது.
அவரது எளிமையின்
பலனாய்
என் பயணம் இனித்தது.
அவரது நேர்மையின்
நிழல்
என் முகவரி ஆனது.
ஆயினும்
அவரது அன்பின்
சுவடு மட்டும்
நான் என்றும் அறியாதது.
இருக்கட்டும்,
என் மகளின் நெற்றியில்
நான் முத்தமிடும்
போதெல்லாம்,
ஆண்டவா,
என் தந்தையின் நெற்றி
ஈரமாகாமல் போகுமா?
No comments:
Post a Comment