Monday, 28 March 2016

திரைப்படம்- தோழா

தோழா.

ப்ரஞ்ச் Intouchables   திரைப்படத்தின் அதிகாரப் பூர்வமான மறுவாக்கம். அதனால் அதன் கார்பன் காப்பி. அந்தப் படம்தான் மலையாள beautiful மற்றும் இந்தி குல்ஜாரிஷ் ஆகிவற்றின் source of inspiration.

இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. இப்படி ஒரு feel good  திரைப்படத்தைத் தந்ததற்காக. வறண்டு வாடும் தமிழ் திரையுலகில் இது ஒரு கோடை மழை.

மனுஷனுக்கும் மனசுக்குமான பிணைப்பை அழகாகவும் சுவையாகவும் இயல்பாகவும் சொல்லியிருக்கும் பாங்கு நன்று.
ஆனால் ப்ரஞ்ச் படத்தில் வெள்ளை- கறுப்பு இன வேற்றுமையை மையப்படுத்தியிருந்தது போல இதில் சித்தரிக்கப்படவில்லை. கதை மாந்தர்களிள் குணாதிசயம் தான் முன்னிலை. இனம் அல்ல.

படத்தின் மிக வலுவான அம்சம் நடிகர் தேர்வு. இரு மொழிப் படம் என்பதால் அதிகமான கவனம் காட்டியுள்ளனர். நாகார்ஜுனா, கார்த்தி, ப்ரகாஷ்ராஜ் மூவரும் அசத்தல்.

குறிப்பாக கார்த்தி சிரசில் இன்னொரு மயிற்பீலி. தாயால் வெறுக்கப்படும் இவர் தன்னை நிரூபிக்க வேண்டி  அனுபவிக்கும் பாடுகள் அய்யோ பாவம் ரகம். அந்த  வேதனையை அறிந்தவர்களுக்கு சீனுவாக வரும் கார்த்தியின் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் வலிக்கும்.  ஆனால் மெலோ ட்ராமாவாக திரைப்படம் போகாமல் முழுவதும் அங்கங்கே இயல்பாக நகைச்சுவையையும் கார்த்தி லாவகமாகத் தெளிக்கிறார்.
வீல் சேரோடு படத்தையும் நகர்த்துகிறார்.

கழுத்துக்குக்கீழே இயக்கமில்லாத paraplegic கோடீஸ்வரனாக நாகார்ஜுனா. வெறும் முக பாவனைகள் மட்டுமே காட்ட வேண்டிய பாத்திரத்தில் over acting செய்ய வாய்ப்பு அதிகம் உண்டு. குறிப்பாக tight angle shots அதிகம் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனாவின் நடிப்பு பாராட்டுக்குரியது. கழிவிரக்கம், பொருமல், கையாலாகாத்தனம், ஆற்றாமை என எல்லாவிதமான உணர்ச்சிகளையும் அநாயாசமாக தன் அமைதியான முக பாவனையில் கச்சிதமாக வெளிப்படுத்தி நாக் அப்ளாஸ் அள்ளுகிறார்.

ப்ரகாஷ்ராஜ். மீண்டும் அமர்க்களம். இப்படம் மாதிரி மிரட்டல் க்ளோஸ்- அப் ஷாட்ஸ் அவருக்கு வேறு படத்தில் கிடைத்தாலும் இந்த effect கிடைக்குமா என்பது அய்யமே. குறிப்பாக அந்த இரண்டு லட்ச ரூபாய் ஓவியத்திற்கு அவர் காட்டும் expressions.. ...செம !!

தமன்னா. மெல்லினமும் இடையினமும் சிக்கென அமையப்பெற்று படம் முழுவதும் வலம் வரும் நாயகி.  என்னது,
நடிப்பா? அதெல்லாம் யார் கேட்டது?  அவருக்கும் நாகார்ஜுனாவிற்கும் ஆடைத் தேர்வு பிரமாதம்.  ஒரே ஒரு சந்தேகம். தமன்னா சாப்பாடெல்லாம் சாப்பிடுவாரா? இல்லை ஸட்ரா வைத்து வெறும் காற்று மட்டும் உறிஞ்சுவாரா?

படத்தின் பலம் என்றால் உரையாடல்கள். அங்கங்கே மிதமான ஹ்யூமர். தேவைப்பட்ட இடங்களில் அளவான சென்ட்டி. நேசம் பற்றிய காட்சிகளில் வருடல். ராஜு முருகன் கூட்டணி நெகிழவைக்கிறது.
மனுஷன் போகும் இடங்களுக்கெல்லாம் மனசு போகணுமா?, நேசம் உள்ள இடத்தில பயம் இருக்கும் போன்ற வசனங்கள் கதையின் பயணத்திற்கு நன்கு உதவுகின்றன.

ஒளிப்பதிவு இதம். லைட்டிங் அருமை. பாரிஸ் காட்சிகள் பளிச்.  விக்ரம் சக்கர நாற்காலியிலிருந்து  Eiffel towerஐ அதன் அருகாமையிலிருந்து கழுத்தைத் தூக்கிப் பார்க்க முடியாத ஆற்றாமையையும் அதையே இரவில் தொலைவிலிருந்து முழுதாகப் பார்க்க முடிகிற போது அடைகிற மகிழ்வையும் இயக்குநர் ஒளிப்பதிவாளரின் லென்ஸ் வழியே சொல்கிற காட்சி அழகு.

ஏமாற்றம்? உண்டு.

கோபி சுந்தரின் இசை. பாடல்களும் சுமார். அநிருத் பாடும் பாட்டு உட்பட எல்லாம் இசை இரைச்சல். பின்னணி இசை கொஞ்சமும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசை மட்டும் அம்சமாக அமைந்திருந்தால் படம் இன்னொரு தளத்திற்குச் சென்றிருக்கும்.

எடிட்டர்.  அவர் தனது கத்தரிக்கு சாணை பிடிக்கவில்லை போல. படத்தின் நீ....ளம்  அதிகம். பல காட்சிகள் இழுவை. கார் சேஸ் எல்லாம் இன்னும் சுருக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த ஐட்டம் சாங் முகம் சுளிக்கச் செய்கிறது. கல்பனா, விவேக், ஜெயசுதா...வழமையான நடிப்பு.

மனிதனின் அக/உளத் தேவைகளை உரக்கச் சொல்கிற கதை. 

பணம் மட்டும் பிரதானம் என்று ஒரு தலைமுறையே அலைகிற காலத்தில் பணம் தவிர மனிதனுக்கு வேண்டிய இதர தேவைகளை அழுந்தச் சொல்லும் திரைக்கதை.

அவசியம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து.

இப்படி எல்லா வகையிலும் ஸ்கோர் செய்திருக்கிற படம்.

Wednesday, 23 March 2016

திருமணச் சந்தை

நன்கறிந்த நண்பர்
குடும்பத்தில்
திருமணக் காண்டம்.

தகப்பனின் முதுகெலும்பு 
உடைக்கப்பட்ட வில்லானது.

இருவரின் குணம் தவிர
மற்றவை எல்லாம் 
ஆழமாக அலசப்பட்டன.

சொத்துப்பத்திரம்
சேட்டு வீட்டிற்கும்
கடன் பத்திரங்கள்
மணப்பெண் வீட்டிற்கும்
குடிபுகுந்தன.

ஆடம்பர மண விழா
வேண்டுமென பெண்ணும்
அடம்பிடித்து
அப்படித்தான்  எல்லாம்
நடந்தன.

கையேந்தி, பல்லிளித்து,
கூனிக்குறுகி
கல்யாண விரயத்தை
வலியோடு மறைத்து
கடன்காரப் பெற்றவர்கள்
ஆயாசமாய் அமர்ந்து
சில மாதங்களே ஆயின.

கட்டங்களையும் கோடுகளையும்
வைத்து வாழ்க்கையைக்
கணித்த ஜோசியரால்
அவர்களது மனதைக்
கணிக்க முடியவில்லை.

கணவனைப் பிடிக்கவில்லை
என்று கதறியழுது
வீடு திரும்பினாள்
செல்ல மகள்.

பெற்றோர் வைத்த
செல்லப் பெயர்
அவளுக்கு இருக்க 
சமூகமோ தன்பங்குக்கு
பெயரொன்றை
அவளுக்குச் சூட்டி
மகிழ்ந்தது.

அமீனா ஜப்திக்கு
சம்மன் தந்தான்.
வழக்கு செலவுக்கு
புருஷனே தேவலாம்
என்றானது.

அம்மா முதலில்
முடங்கிப் போனாள்.
அப்பாவின் இதயம்
உடைந்தே போனது.

ஒரு நல்ல நாளில்
அம்மா தாலியறுக்க,
அண்ணியோ
தனிக்குடித்தனம் போனாள்.

துக்கம் தொண்டையை
அடைக்க என் தோள்
சாய்ந்து அவள்
கதறி அழுத வேளையிலும்
எனக்கு அவளின்
தகப்பன் பட்ட வேதனையே 
பெரிதாகத் தெரிந்தது.

அடிப்பெண்ணே,
இத்தனை நிச்சயமற்ற
திருமணத்திற்காகவா
உன் தகப்பனின்
உயிரெடுத்தாய்
என்று தானே நியாயமாய்
நான் அவளிடம் கேட்க வேண்டும்?

Monday, 21 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-26

நீதிமன்றங்களிலிருந்து வழக்காடிகள் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையையும் இதர தொகைகளையும் பெறுவதற்கென்று தற்போதுள்ள நடைமுறைகள் மாற்றப்படும் நேரம் எப்போதோ வந்தாகிவிட்டது. குறிப்பாக நிலம் கையகப்படுத்தல் குறித்த வழக்குகளிலும் வாகன விபத்து பற்றிய வழக்குகளிலும் அரசோ, காப்பீட்டு நிறுவனமோ தீர்ப்புத் தொகையைச் செலுத்தவும் அதை வழக்காடிகள் பெற்றுக் கொள்ளவும் தற்போது பின்பற்றப்படும் வழிமுறைகள் மிகச் சிக்கலானவை. அதிகமாகக் காலம் தாழ்த்தவல்லவை. காரணம், அவை பழைய வங்கி நடைமுறைகளை இன்றும் பின்பற்றுவதே.

ஒரு நிறுவனம் தீர்ப்புத் தொகையை வட்டியோடு நீதிமன்றத்தில் தற்போது காசோலைகள் மூலமே செலுத்த இயலும்.
அத்தொகையை அந்த நீதிமன்றம் வைப்பீடாக மாற்றி வங்கியில் இட்டு வைக்கிறது. அத்தொகையை வழக்காடிகள் பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி சீக்கிரம் கிடைத்தால் கூட அதை ரொக்கமாக அவர்கள் தங்கள்  கையில் வாங்குவதற்குள் வங்கி, கருவூலம் மற்றும் நீதிமன்றங்களின் நடைமுறைகள் அவர்களை வெகுவாக அலையவைக்கின்றன. நவீன வங்கி பணப் பட்டுவாடா நடைமுறைகளை நீதிமன்றங்கள் இன்னும் பின்பற்றும் வகையில் விதிகள் திருத்தப் படாமல் இருப்பது தான் இதற்கு முக்கியமான காரணம்.

National Electronic Fund Transfer, on line transfer, RTGS என்று எத்தனையோ நவீன மற்றும் விரைவான மின்னணு நடைமுறைகள் வங்கிகளால் எப்போதோ நம் நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட பின்பும் நீதிமன்றங்கள் மட்டும் இன்னும் பின்தங்கியிருப்பது ஏன் என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.

ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற அளவிலும் கணிணி செயல்பாடு தெரிந்த court managers நியமிக்கப்பட்டு CAOக்கு நிகராக ஊதியம் பெறுகிறார்களே, அவர்களின் பங்களிப்பு என்ன? National Informatics Center அதிகாரிகளின் பங்களிப்பு என்ன?

ஒரு வழக்காடிக்கான  தீர்ப்புத் தொகையை அரசோ, சம்பந்தப்பட்ட நிறுவனமோ NEFT etc வழியில் அந்த நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கிற்கு உடனே அனுப்பலாம். அத்தொகையை அந்த வழக்காடியின் வங்கிக் கணக்கிக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றத்தின் வங்கி உடனே அனுப்பலாம். எல்லாம் ஒரே ஒரு க்ளிக் மூலம்தான்.

இதனால் மிச்சமாவது , பொன்னான நேரம் மட்டுமல்ல. அதைவிட அரிதாகிவிட்ட மரக்கூழாலான காகிதக் குவியல்களும்தான்.

எல்லாவற்றையும் விட வழக்காடிகளின் தொகையிலிருந்து அவருக்குத் தெரியாமல் தனது 'அரிமாப் பங்கை' எடுத்துக் கொண்டு விட்டு மீதியை மட்டும் தனது கட்சிக்காரருக்கு கொடுக்கும் சில வழக்குரைஞர்களின் மோசடியைத் தவிர்க்கலாம்.

It is not too late to amend the civil rules of practice with relating to deposit and withdrawal of money.

Sunday, 20 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-25

ஒரு வழக்குரைஞன் சமூகத்திற்கு தன்னால் முடிந்த வரை உதவுதல் ஒரு அறம். 

பொது வாழ்வில் நேரடியாக இறங்கிப் பணியாற்றும் வழக்குரைஞர்களுக்கு மட்டுமே சமூக சேவைக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கும்.

மற்றவர்களுக்கு?

அதிக வாய்ப்பு இல்லை என்பது உண்மை தான்.

அதனால் நான் ஒரு வழியில் என்னால் இயன்ற ஒரு காரியம் செய்து வருகிறேன்.

என்னைத் தேடி வரும் நபர்களுக்கு வழக்கு அல்லாத- ஆனால் -சட்டம் சார்ந்த ஆலோசனைகள் மட்டும் சொல்ல நேரும் போது அதற்கு நான் ஊதியம் ஏதும் வாங்குவதில்லை. அவர்கள் கொடுத்தாலும் பெறுவதில்லை. இதை என்னால் முடிந்த சேவை என்றே நான் நம்புகிறேன். எனக்கு இதில் நிறைய நேரம் செலவாகிறது. உண்மை. ஆனால் கிடைக்கும் திருப்தியோ அலாதி. தன் வாழ்க்கை தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவனுக்குத் தான் நேரம் அவனுடையது.

ஒரு வக்கீலிடம் மக்களால் கேட்கப்படும் கேள்விகள் அவனை சிந்திக்கச் செய்யும். நிறையப் படிக்க வைக்கும். தெளிவு தரும். அந்த அனுபவம் வேறு ஒரு வழக்கிற்கு அவனுக்கு நன்கு பயன்படும்.

எத்தனை  விதமான கேள்விகள் ஒரு வழக்குரைஞனை நோக்கி வீசப்படும் தெரியுமா? கணக்கில்லை.  அவன் எங்கு போனாலும் அவனது தொழில் அவனை விடாது. மருத்துவர்கள் மாதிரி.

பிறப்பு இறப்பு பதிவு, நாமினி உரிமைகள், கடனுக்காக ஜாமீன் தருதல், பெயர் மாற்றம், உயில் பதிவு, திருமணப் பதிவு, வங்கிக் கடன், மருத்துவக் காப்பீடு, சாலை விபத்து என்று நீதிமன்றம் போகாத ஆனால் சட்டம் சார்ந்த அய்யங்களை ஒரு வழக்குரைஞன் ஊதியம் பெறாமல் தீர்த்து வைத்தால் சமூகம் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடும்.
இது நிஜம்.

நான் மட்டுமல்ல, இலவச சட்ட ஆலோசனையை முடிந்த வரையில் பலரும் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை எல்லாம் பொது மக்கள் தெரிந்து வைத்துக் கொள்வதிலும் நினைத்த நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொள்வதிலும் நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு.

வேறு என்ன செய்யலாம்?
இதற்குத் தீர்வாக எனக்குத் தோன்றுவது இது தான் :

L P O (Legal Process Outsourcing.)

24  × 7 சேவையாக இலவச சட்ட ஆலோசனை வழங்குவதை ஒரு BPO அமைத்து ஒரு தன்னார்வ அமைப்போ, self help groupபோ, சட்ட உதவி மையங்களோ, நுகர்வோர் அமைப்புகளோ மிகச் செம்மையாகச் செய்ய முடியும். சாத்தியம்.

இளம் மற்றும் வளரும் வழக்குரைஞர்களையும் சட்ட மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தலாம். தேவைப்படும் போது கற்றறிந்த மூத்த வழக்கறிஞர்களையும், ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் வரவழைத்து விளம்பரமின்றி இச்சேவையை இலவசமாகத் தரலாம்.

எண்ணிப் பாருங்கள். எத்தனையோ மக்கள் இதனால் பயனடைவார்கள். ஏமாற்றப்படுவதிலிருந்தும் சுரண்டப்படுவதிலிருந்தும், பலப்பல ஏழைகளும், தொழிலாளிகளும், பெண்களும், விளிம்புநிலை மனிதர்களும் காக்கப்பட முடியும்!

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் இது மிகச் சாதாரண ஒன்றே. ஒரு தொலைபேசி அழைப்பில் சரியான வழிகாட்டுதல் கிடைத்துவிடும். மிகப் பரவலான விழிப்புணர்வை இது ஏற்படுத்தும்.
Toll free service அதை முற்றிலும் இலவசமாக்கி விடாதா என்ன? என்ன, அதை நன்கு பரப்புரை செய்ய வேண்டும். அவ்வளவே.

தமிழ்நாடு மாநில சட்ட உதவி ஆணையம் நினைத்தால் இதை எளிதில் நடைமுறைப் படுத்த முடியும்.

செய்வார்களா?

Saturday, 19 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-24

நீதிமன்றங்கள் தம்முன் உள்ள வழக்குகளில் அவசியமும் அவசரமும் இருக்கும் போது உறுத்துக்கட்டளை உத்தரவுகள் ( injunction), தடையாணை( stay) மற்றும் தற்போதைய நிலை நீட்டிப்பு (status quo) ஆகிய இடைக்கால உத்தரவுகளை பிரதான வழக்கு முடியும் வரை அமலில் இருக்கத் தக்கதாக  பிறப்பிக்கின்றன.
அம்மாதிரியான உத்தரவை எதிர் தரப்பு அவ்வழக்கில் ஆஜராவதற்கு முன்பே சூழ்நிலையின் அவசரம் கருதி பிறப்பிக்கின்றன.
அவ்வாறு ex parte  யாக இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில் நீதிபதிகளுக்கிடையே கருத்திசைவு இல்லை. இது நடைமுறையில் மிகப் பெரிய பிரச்சனையாகிவிடுகிறது என்பது கசப்பான உண்மை.
உதாரணமாக ஒரு  இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கும் போது அவ்வுத்தரவு குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே தரப்பட்டால் குறிப்பிட்ட தேதியில் அவ்வழக்கு அந்த நீதிமன்றத்தில் எடுக்கப்படுமா என்றால் அதற்கான பதில் கீழமை நீதிமன்றங்களில் 'ஆம்'.
உயர்நீதிமன்றத்தில்' பெரும்பாலும் இல்லை' என்பதே.

சில நீதிமன்றங்களில்  குறிப்பிடும் மறு தேதியில் அவ்வழக்குகள் எடுக்கப்பட்டு தக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றன. அது நீட்டிக்கப்படலாம். மறுக்கப்படலாம். வழக்கு முடியும் வரை அவ்வுத்தரவு நிரந்தரமாக்கப்படலாம். அல்லது இடைக்கால உத்தரவு மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அம்மனு அனுமதிக்கப்படலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம்.

ஆனால் உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியான நடைமுறையைப் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. காரணம் உயர்நீதிமன்ற வழக்குகளில் எதிர்தரப்புக்கு  அழைப்பாணை serve செய்யப்பட்ட பிறகே வழக்கில் அடுத்த கேட்பு நாள் ஏற்படுத்தப் படுகிறது. இதனால் இடைக்கால உத்தரவை நீட்டிக்க வேண்டி வழக்குரைஞர்கள் குறிப்பாக இளநிலை வழக்குரைஞர்கள் மற்றும் அவர்களது எழுத்தர்கள் போராட வேண்டிவருகிறது என்பதே உண்மை. அது வேண்டுகோளுக்கு உட்பட்டது என்று ஆகிவிட்டாலே சில நீதிமன்றப் பணியாளர்களும்
வழக்குரைஞர்களும் அவர்களது எழுத்தர்களும் தங்களுடைய
'திருவிளையாடல்களை' அரங்கேற்றத் தொடங்குகிறார்கள்.

Court slip மூலம் அனுமதி பெற்ற பிறகும் கேட்பு நாள் பட்டியலில் இடம்பெறா அத்தகைய வழக்குகள் எண்ணிலடங்கா. விளைவு? நீட்டிக்கப்படாத இடைக்கால உத்தரவின் கதி நீதிமன்றத்துக்கு வெளியே பல்வேறு துறைகளால் தீர்மானிக்கப்படுகிற அவலம் ஏற்படுகிறது. ஒரு இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படாவிட்டால் அம்மனு தள்ளுபடி செய்யப் படவில்லை அல்லது அவ்வுத்தரவு நீக்கறவு செய்யப்படவில்லை என்பதால் அந்த உத்தரவு தொடர்ந்து அமலில்தான் உள்ளது என ஒரு கருத்தும், இல்லை, இல்லை, நீட்டிக்கப்படாத ஒரு இடைக்கால உத்தரவு நீக்கறவு செய்யப் பட்டதாகவே கருதப்படும் என்று மற்றொரு கருத்தும் நிலவி வந்து அது இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத ஒரு பெரிய சர்ச்சையாகவே நிற்கிறது.

ஒரு தவணையில் ஒரு உத்தரவு ஒரு நீதிபதியால் நீட்டிக்கப்படவில்லை என்றால் மறுதவணையில் அதை நீட்டிக்க மறுக்கும் நீதிபதிகளும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு நடைமுறை இருப்பதில் ந(க)ஷ்டம் வழக்காடிகளுக்கு தானே?

கீழமை நீதிமன்றங்களில் இப்பிரச்சனை கிடையாது. ஏன் என்றால், அங்கே எல்லா வழக்குகளிலும் அடுத்த கேட்பு நாள் நாளேட்டில் குறிப்பிடப்பட்டு அந்தக் குறிப்பிட்ட தேதியில் வழக்குகள் தவறாமல் எடுக்கப்படுவதால் ஒரு இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படும் அல்லது இறுதி உத்தரவு அம்மனுவில் பிறப்பிக்கப்படும். அந்த மாதிரி எல்லா வழக்குகளையும் குறிப்பிட்ட தேதியில் பட்டியலிடுவது என்பது உயர்நீதிமன்றத்தில் சாத்தியம் இல்லை தான்.

இதற்கு என்ன தான் மாற்று வழி?

என் சிற்றறிவுக்குத் தோன்றிய வகையில் இம்மாதிரியான இடைக்கால உத்தரவுகளை 'limited peeiod'க்கு மட்டும் வழங்குவதற்கு பதிலாக காலம் குறிப்பிடாது வழங்கலாம். அதன்பின்னர் எதிர் தரப்பு ஆஜராகத் தேவையான நடவடிக்கைகளை( பேட்டா )
மனுதாரர் மேற்கொண்டாரா என்பதைக் கண்டறிய அம்மனுவை குறிப்பிட்ட தேதியில் பட்டியலில் சேர்ப்பதை 'pending service of notice' கட்டாயமாக்க வேண்டும்.
ஒரு வேளை எதிர்தரப்புக்கு பேட்டா கட்ட மனுதாரர் தவறினாலோ, அல்லது நிபந்தனை ஏதும் விதிக்கப்பட்டு அதை மனுதாரர் நிறைவேற்றத் தவறினாலோ நீதிமன்றம் அந்த உத்தரவை நீட்டிக்க மறுத்து விட்டு வழக்கை மேல் நடத்தலாம். அந்த இடைக்கால உத்தரவால் ஒரு வேளை அந்த எதிர்தரப்பினர் குறைவுற்றிருந்தால் அந்த மனுவுக்கு பதில் உரையைத் தாக்கல் செய்து விட்டு அந்த உத்தரவை நீக்கறவு செய்யக் கோரி அந்த எதிர்மனுதாரர் தக்க மனு தாக்கல் செய்து கொள்ளட்டுமே!

தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஒரு நீதிமன்றம் எந்தக் காரணமும் இன்றி தானே நீட்டிக்காமல் இருப்பதால் யாருக்கு லாபம்? அந்த வழக்கிற்காக பெரும் செலவு செய்து சட்டத்தை தன் கைகளில் எடுக்காது நமது நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்துக் கிடக்கும் வழக்காடிகளுக்கு அது ஒரு மீட்க இயலாத இழப்பாகாதா?

Friday, 18 March 2016

நவீனம்

காலை எழுந்தவுடன் நல்ல coffee
பின்பு நாள் முழுதும் இந்த இணையம்
மாலை வந்த உடன் தொலைக்காட்சி
என்று
பழக்கப்படுத்திக்கொண்டோம் நாமே.

துறவு

என்ன சொல்லியிருப்பாய்
சித்தார்த்தா?
உன் துறவு அவளையும்
சேர்த்தே என்றா?

Thursday, 17 March 2016

பழைய காகிதங்களிலிருந்து- எங்கேயோ கேட்ட குரல்

உனக்கான ஒரு கடிதத்தை
எழுதும் வசமான
ஒரு வாய்ப்புக்காக
காத்திருந்தேன்.
நாட்கணக்கில்.

சொல்லி மகிழவும்,
பகிர்ந்து கொள்ளவும்
சொல்லாது அழவும்
சேதிகளை
நினைவிடுக்குகளில்
சேர்த்தும் வைத்திருந்தேன்.

நான் சொல்லுவதை
எல்லாம் நீயும்
ரசிப்பாய்.
எனக்குத் தெரியும்.

எதைப் பார்த்தாலும்
எதை வாசித்தாலும்
உன்னோடு சேர்ந்தே
பார்க்கிறேன்.
ரசிக்கிறேன்.

ஒன்றாகப் பழகியும்
பேசியும் கழித்த
பொன் பொழுதுகள்
நினைவகத்தை
அழுத்தித் தட்டும்போது
இன்னும் அதிகமாக
உன்னை இழக்கிறேன்.

உனக்கு ஏதாவது
எழுதவேண்டும்
என்று தினம் தினம்
எத்தனித்தேன்.

என்ன காரணம் காட்டி
எழுதலாம்
என்பது தெரியாது
நின்ற போதிலும்
என் மனதில் நீதான்
நிற்கின்றாய்.

இப்போது உணர்ந்துவிட்டேன்.
உனக்காக நான் ஏதும்
எழுதுவதற்கு என்ன
தனியான காரணம்
எனக்கு வேண்டும்?

நீ என்னவள்
என்பதை விட?

சொல்வதெல்லாம் உண்மை-23

சொல்வதெல்லாம் உண்மை- பகுதி 9 ல் நீதிமன்றக் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில் பொது மக்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றிப் பார்த்தோம். நீதிமன்றக் கட்டணத்தை நேரடியாக வங்கியிலோ அல்லது onlineலோ செலுத்தும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது கோரிக்கை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2013ம் வருடத்து தீர்ப்பின் படி அதன் விதிகள் குழு சொன்ன பரிந்துரையை ஏற்று தமிழக அரசு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணச் சட்டத்தில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டிருப்பதாக இன்று அறிந்தேன். அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதே தற்போது தான் தெரியவருகிறது. அதன்படி இனிமேல் நீதிமன்றக் கட்டணத்தை முத்திரைத் தாளாகவோ அல்லது
e- stamping மூலமாகவோ நாம் செலுத்தலாம்.

அது என்ன e stamping?

அரசு நியமித்துள்ள ஆணையத்திடமோ ( Central Record Keeping Agency) அல்லது அந்த ஆணையம் அங்கீகரித்துள்ள அட்டவணை வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்கள் போன்ற மையங்களிலோ ( Authorised Collection Center) நீதிமன்றக் கட்டணத்தை இனிமேல் நாம் செலுத்தலாம். யாரால் எதற்காக அத்தொகை செலுத்தப்படுகிறது போன்ற முழு விவரங்களையும் அதற்கான படிவத்தில் எழுதி அந்த மையத்தில் சமர்ப்பித்து நீதிமன்றக் கட்டணத்திற்கான  தொகையை அதனிடம் ரொக்கமாகவோ, காசோலையாகவோ, வரைவுக் காசோலையாகவோ, அல்லது வங்கிகள் வாயிலாக RTGS, NEFT மூலமோ அல்லது ஒரு வங்கியிலிருந்து அம்மையத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியோ தொகையை வரவு வைத்தால் முழு விவரங்களோடு அம்மையம் நமக்கு ஒரு சான்று அச்சிட்டுத் தரும். ஒவ்வொரு சான்றுக்கும் ஒரு தனி அடையாள எண் தரப்படும். அச் சான்று தான் நீங்கள் உங்கள் வழக்குக்காகச் செலுத்தும் நீதிமன்றக் கட்டணத்திற்கான
e stamp.

நல்லது தான். 

போலி முத்திரைத்தாள் மோசடிகளும், அளவற்ற கமிஷன் தொகைகளும் இராது.

ஆனால் கொஞ்சம் விவரம் தெரியாவிட்டால் கடினம். ATM card போல நாளாவட்டத்தில் இதுவும் பழகிவிடும் என நம்பலாம்.

இதில் குறைபாடு ஏதும் இல்லையா என்றால் உண்டு.

அச்சான்று அல்லது e-stamp தொலைந்து போய்விட்டால் அவ்வளவு தான். அதற்கு Duplicate வாங்க விதிகளில் வழியில்லை.

அச்சான்றுகளில் ஏதும் தவறுகள் ஏற்படின் திருத்தவும் இயலாது.

மேலும் நாம் செலுத்திய தொகையை refund பெற வேண்டுமென்றால் மத்திய ஆணையத்தைத் தான் அணுக வேண்டும். தங்கள் பணத்தை வரவு வைத்து சான்று/ e stamp வழங்கிய மையத்தை அல்ல.

மத்திய அரசு நாடெங்கும்
e stampingக்கான ஆணையமாக
Stock Holding Corporation of India Limited என்ற ( SHCIL) நிறுவனத்தை நியமித்திருக்கிறது. அந்த ஆணையம் பல வங்கிகளையும் அஞ்சலகங்களையும் இதற்கான அதிகாரப்பூர்வ தொகை வசூல் மையங்களாக நியமித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் ஏற்கெனவே பதிவுத்துறையில் இந்த e stamping வசதி நடைமுறையில் இருக்கிறது.

இருந்த போதிலும் நீதிமன்றக் கட்டணத்தை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்குரைஞர்கள்  வழக்காடிகள் வங்கியிலோ அல்லது நீதிமன்றத்திலோ செலுத்தும் வகையில் இன்னும் சட்ட விதிகள் திருத்தப்படவில்லை. உண்மையில் அதுதான் மிக எளிமையான முறை.

நீதிமன்றக்கட்டணச் சட்டம்  தற்போது e stamping க்கு வழிவிட்டு திருத்தப்பட்டிருப்பதால் தனியாக ஒரு ஆணையம் ( CRA) இதற்காக நியமிக்கப்பட இருக்கிறதா? 


அல்லது SHCIL நிறுவனமே இதற்கான ஆணையமாகத் தொடரப் போகிறதா? 

அதிகாரப்பூர்வமான வசூல் மையங்கள் ( ACC) எவை?

தெரியவில்லை.

இதற்கான விதிகள் வரும் வரை காத்திருப்போம்.

Wednesday, 16 March 2016

என்ன மாதிரி உலகம்?

அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார் மகள். காலை மணி 6.00. நடைப்பயிற்சிக்கு  துணைக்கழைப்பதற்காக அவரது உறக்கத்தைக் கலைக்கிறேன்.

'இன்னும் கொஞ்ச நாள் தானே அப்பா, ப்ளீஸ். கொஞ்ச நேரம் மட்டும் தூங்கிக்கிறேனே' என்று உறக்கத்தினூடே கெஞ்சுகிறார் மகள். ஏதும் புரியாமல் மனைவியைப் பார்க்கிறேன்.

'இது கூடத் தெரியாதா உங்களுக்கு?' என்கிறார் அவர். '12ம்வகுப்புக்கான பாடங்கள் துவங்கியாச்சு. 11வது வகுப்புக்கான தேர்வு முடிந்து கொஞ்சம் நாள்தான் ஆகிறது. தினமும் அதிகாலையில் கண்விழித்து தேர்வுக்குப் படித்த குழந்தைக்கு ஓய்வு வேண்டாமா? இன்னும் ஒரு வருடத்துக்கு
அவளுக்கு ஏது நல்ல தூக்கம்?'
இது அவரது விளக்கம்.

எனக்கு இதில் உடன்பாடில்லை.
அவருக்கோ வேறு வழியில்லை.

மதிப்பெண்களே அறிவின் ஏகமான உரை கல்லாகிவிட்ட நாடல்லவா இது? என்ன செய்ய?

அறிவைத்தேடுவதைத் தவிர வேறொன்றும் அறியாத கல்வி முறையில் தமது சிறார் பருவத்தைத் தொலைக்கும் மாணவர்கள்...

பொருள் தேடுவதைத்தவிர வேறெதுவும் நினைக்காத கணவன்கள்...

இருவருக்கும் நடுவில் தனக்கென ஏதுமின்றி தவிக்கும் மனைவிகள் .....

எல்லா இல்லங்களிலும் இதுதான் நிலைமை என்றால், என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?

Monday, 14 March 2016

அட....

என்ன இது
அதிசயம்!
நேர் கோட்டில்
ஒரு வானவில்!

Sunday, 13 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-21

சொல்வதெல்லாம் உண்மை-21
-------
Not much is achieved in the field of development of law and justice through computers and information technology. Basically majority of lawyers and judges are known for their lack of scientific temperament. The reason is simple. Lack of science/ technology as their basic education.

The young lawyers are promising as most of them are familiar with use of computers. A few judges also use latest gadgets and technology. No doubt. But it is confined to the process of search of judgments and enactments only.

It is not a big issue even for a novice since most of the devices and programme/ applications are user friendly and menu driven.

As far Madurai Bench is concerned, I would say things in the positive. In fact I was instrumental in establishing the digital /e/ i- library in MMBA with lot of sophisticated technical advancements during my tenure as the librarian.

But i am much chagrined at being dissatisfied because nothing much is achieved in legal field in digitalising the law books, treatises, text books, commentaries and case laws to create a world wide legal data base. Or at least in Pan-Indian level.

Still worse is the scenario when it comes to digitalisation of legal data base in Tamil. There are not many lawyers with  technical knowhow.  There are not many qualified technocrats with law degree. It is a herculean task to create such a huge techno trove for legal research, documentation and data base in the absence of technocrat lawyers, much less than advocates.

When googled i could find only one such law- tech course recognised by the Bar Council of India. The University of Petroleum and Energy Science (UPES) at Dehradoon is the only institution in Asia to offer B. Tech + LLB as a six year course either with cyber laws or with Intellectual Property Right as the specialisation. But again the degree is not academic or research oriented.  It is mainly meant to specialise in corporate law or cyber law practice.

It goes without saying, thus, that leading  universities and law colleges, public or private, should invest more in establishing special seats/faculty so as to mould the aspiring law students to be trained as qualified technocrats with IT as the mainstream. It will pave way for creation of a complete platform to carry on research and not merely to practise law.

Wednesday, 9 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-20

திருமணத்தில் முடியும் காதல் மட்டுமே நம் நாட்டில் வெற்றி அடையும் காதலாக உணரப்பட்டு வருகிறது. எனவே காதல் திருமணம் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். குடும்பத்தார் சம்மதமின்றி காதல் துணையைக் கரம் பற்றி கடைசிவரை தனியே சுகமாக வாழ்ந்து காட்டியவர்கள் நிறைய பேர் உண்டு. திருமணத்திற்கு பின் தமது குடும்பத்தாருடன் சமாதானமாகப் போனவர்களும் நிறைய உண்டு. அன்றி அதில் தோற்றவர்களும் நிறைய உண்டு.

காதல் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது அன்பு மட்டுமன்றி நிறைய பிற சங்கதிகளும் இங்கு ஏனோ முக்கியமாகி விட்டன. அதில் முக்கியமானது பொருளாதாரம். பலருக்கு இங்கு 'பொருளே' தாரம் என்பது வேறு கதை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பதிவுத் திருமணங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணம் என்பதை நம் நாட்டுச் சட்டங்கள் இரண்டு வகையாகப் பார்க்கின்றன. முதலாவது அவரவர் மதம் சார்ந்த திருமணச் சட்டம். இருவரும் அந்த மதம் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மாற்று மதத்தவரை ஒருவர் மணம்புரிய வேண்டும் என்றால் அதற்கு சிறப்புத் திருமணச் சட்டம் என்ற தனி சட்டமிருக்கிறது. அச் சட்டத்தின் கீழ் நடத்திக்கொள்ளப்படும் திருமணங்கள் பதிவுத் திருமணம் எனப்படும். இந்து திருமணச் சட்டத்தில் தமிழ்நாட்டுக்குப் பொருந்தக் கூடியதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு அதன் படி வைதீக சடங்குகள் அற்ற சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டன.

பல தருணங்களில் சாமான்யமனிதரால் சட்டங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படுவதில்லை. திருமணப் பதிவு என்பது வேறு. பதிவுத் திருமணம் என்பது வேறு. இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களோ உறவினர் சம்மதமின்றி செய்து கொள்ளும் (காதல்) திருமணங்களில் சமயச் சடங்குகள் ஏதும் அவசியமில்லை. பதிவாளர் அலுவலகத்தில் தகுதி வயது மற்றும் முகவரிச் சான்று சமர்ப்பித்து ஆட்சேபணை கோரிய கால அவகாசம் முடிந்த பின் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் செய்து கொள்ளும் திருமணங்கள் பதிவேட்டில் பதிந்து திருமணப் பதிவுச் சான்றிதழ் தரப்படும். அது தான் பதிவுத் திருமணம். பதிவுத் திருமணம் தோல்வியுற்றால் மணமுறிவுக்கான வழக்கும் அதே சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தான் தாக்கல் செய்யப்பட முடியும்.

ஆனால் திருமணப் பதிவு என்பது வேறு. அந்தந்த மதம் சார்ந்த சட்டத்தின் கீழ் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே சமயச் சடங்குகளின் மூலம் (அல்லது தமிழக இந்துவாக இருப்பின் சுயமரியாதை முறை திருமணம் செய்து கொண்டிருந்தால்) அத் திருமணத்தை அந்தந்த மதம் சார்ந்த திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதே திருமணப் பதிவு ஆகும். மத முறைப்படி ஏற்கனவே நடந்த திருமணத்திற்கான சான்று இதற்கு அவசியம் தேவை.

இதில் சிக்கல் என்னவென்றால் இந்து திருமணச் சட்டத்தில் மட்டுமே ஏற்கனவே நடந்த திருமணத்தை பதிவு செய்து கொள்ள வழி இருந்தது. இஸ்லாமிய திருமணங்களைப் பதிவு செய்ய விதிகள் இல்லை. கிறித்தவர்களின் திருமணம் தேவாலயங்களில் நடத்தப்படும்போது அத் தேவாலயத்தின் பாதிரியார் அத் திருமண விவரங்களைப பதிந்து சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். அதுவே பதிவாக சட்டம் கருதுகிறது. ஆனால் கடவுச் சீட்டு பேறும்போதும் விசா கேட்கும் போதும் திருமணப் பதிவுச் சான்றிதழ் தேவையாகிவிட்டது. திருமணத்திற்கு சரியான சான்று இன்றி ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் கதி நீதிமன்றங்களை உறுத்தவே 2006ம் வருடம் சீமா எதிர் அஸ்வின் குமார் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் எல்லா
மதத்தினரின் திருமணங்களையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி எல்லா மாநிலங்களும் சட்டமியற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை ஏற்று மாநிலங்கள் சட்டத்தை இயற்றின. தமிழ்நாடும்.

2009ம் வருடம் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தையும் அதன் கீழான துணை விதிகளையும் இயற்றியது. ஆனால் அதன் முக்கியமான அம்சமே ஒரே மத்ததைச் சேர்ந்தவர்கள் அவர்களின் மதத் திருமணச் சட்டத்தை அனுசரித்து ஏற்கனவே செய்து கொண்ட திருமணங்களை சட்டப்படி பதிவு செய்து கொள்ள முடியும் என்பதே தவிர வேறு மதங்களைச் சேர்ந்த மணமக்களின் கலப்புத் திருமணங்களை அல்ல. சுயமரியாதைத் திருமணங்கள் இந்து திருமணம் என்பதால் சிக்கல் இல்லை. ஆனால் இச் சட்டத்தின் கீழ் மணமக்கள் அவசியம் பதிவாளர் முன்பு நேரில் ஆஜராவதிலிருந்து சிறப்பு விலக்கு அளித்திருப்பதை சாதகமாக்கிக்கொண்டு வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும் அதற்கு முன்பு திருமணமே செய்து கொண்டிராத நபர்களையும் தம்பதிகளாக பல சார் பதிவாளர்கள்- வழக்கறிஞர்கள் கூட்டணி அமைத்து பதிவு செய்திருப்பது தெரிந்து திகைத்துப் போனது அரசு. சென்னை உயர் நீதிமன்றமும் அத்தகைய திருமணப்பதிவுகளைச் செல்லாது என அறிவிக்க, சற்று சுதாரித்துக் கொண்டுள்ளது தமிழகப் பதிவுத் துறை. இருப்பினும் அத்தகைய சட்டவிரோதமான திருமணப் பதிவுகள் முழுமையாக நடப்பதில்லை என்று சொல்வதற்கில்லை.

தன் காதல் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போடும்படி ஒரு பெண்ணை பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்ற ஒருவன் அப்பெண்ணின் முகவரி, வயதுச் சான்றை வைத்து அவரையே மணமகளாக்கி அவர் சம்மதம் இல்லாமலேயே மேற்சொன்ன சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அவரைத் திருமணப் பதிவு செய்த உதாரணம் இங்கு உண்டு. அரை மணி நேரத்தில் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் அத்திருமணப் பதிவை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு எத்தனை வருடம் நடக்குமோ?

ஆகையால், கலப்புக் காதல் கடிமணம் புரியும் மணமக்களே, உங்களுக்கு வாழ்த்துகள்.

அன்பும் அறனும் உடைத்த தங்களின் திருமணம் சட்ட முறைப்படி நடக்கிறதா என்பதை விழிப்புடன் கவனிக்கவும். இல்லையெனில் பின் விளைவுகள் தீவிரப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கவனம். 

ஏன் என்றால் இங்கே திருமணம் செய்து கொள்வதைப் போல விவாகரத்து பெறுவதோ அத் திருமணம் செல்லாது என உத்தரவு பெறுவதோ எளிதல்ல.

Tuesday, 8 March 2016

Compilation Commission- Need of the hour.

Verdicts of the Supreme Court bind all courts subordinate. The rules of binding nature of judgments of the high court and that of the Apex Court are embodied under the doctrine of Stare Decisis.

Article 141 of the Constitution of India states that the orders of the Apex Court have the force of law through out the Nation.

While this being the case is it not incumbent on the part of the judiciary to compile all the judgments that have become final and have settled the legal propositions governing the field?

You may say that the law reports and journals do the job. Actually they do not. Because the law journals report various verdicts periodically and they don't compile the laws on the given subject or topic.

Similarly even the updated or revised edition of treatises on any law subject do not compile all the verdicts governing a particular area.

They speak of only cases that are land mark or bench mark in their opinion. Some books are not reprinted too.

So the best way out in my humble opinion is to compile all verdicts of the Supreme Court from its inception in 1950 up to at least 2010. After collecting all case laws, such of those cerdicts that have become final and given quietus to the debated legal subjects may be segregated. From and amongst such of those selected rulings, further filteration need be done as to identify the cases under the following broad heads:
1. Verdicts that have settled the law.
2. Verdicts that have been over ruled
3. Verdicts that have been dissented ot distinguished with
4. Verdicts that have been declared to have been delivered per incuriam.
5. Verdicts that have referred some issues to the decision of larger bench.

The published compilation may be updated once in three years and in due course not much is expected to be done except compiling such verdicts only.

By doing so what is avoided is inconsistency among the courts and divergent views on the same subject.

What is achieved is uniformity in justice delivery system and judicial discipline.

Next question that looms large for consideration is the persons with whom this laborious job be entrusted to.

I think only the retired judges of the Apex Court who have left a trove of rich legsl legacy can be the fit persons to accomplish this task.
A complilation commission under the aegis of the Apex Court would serve as the panacea.

Better late than never.

சொல்வதெல்லாம் உண்மை-19

நமது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கள் அனைத்து கீழமை நீதிமன்றங்களையும் கட்டுப் படுத்துவன. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 141ம் பிரிவு இதை உறுதி செய்வதோடு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கு சட்டத்தின்  அந்தஸ்தையும் அளிக்கிறது. ஆக, இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களை பின்பற்றியாக வேண்டும்.
அப்படியென்றால் அத்தீர்ப்புகள் எல்லா நீதி மன்றங்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் அல்லவா?

நீதிபதிகளோ, வழக்குரைஞர்களோ
அல்லது வேறு யாராக இருப்பினும் பல்லாயிரக்கணக்கான அத்தகைய முன் தீர்ப்புக்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணி கடினமானது. தற்போது சட்டப் புத்தகங்களையும் தீர்ப்புத் திரட்டுகளையும்
பதிப்பிக்கும் பணி கணிணி/ டிஜிடல் மயமாக்கப்பட்ட பிறகு அத்தேடுதல் மிகப் பெரிய சவாலாக இல்லை என்றாலும் தீர்ப்புக்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில் அத்தனை தீர்ப்புக்களையும் திரட்டுவது என்பது கடினமான பணியே

குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டப் பிரிவைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டக் கோட்பாட்டைப் பற்றியோ இதுவரை பகரப்பட்டுள்ள அனைத்து இறுதியான தீர்ப்புக்களையும் ஒருங்கே திரட்டி ஒரு தொகுப்பாக பதிப்பித்து வெளியிடுவது அவசியமாகிறது.  ஏன் என்றால் பல சந்தரப்பங்களில் உச்ச நீதிமன்றத்தின் பல முக்கியமான தீர்ப்புக்கள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, கீழமை நீதிமன்றங்களின் கவனத்திற்கு வராமல்/தெரியாமல் போய்விடிகின்றன. அதனால் பல தீர்முடிவுகள் தவறாகவும் அதற்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்ட முன் தீர்ப்புகளுக்கு எதிராகவும் முரணாகவும் அமைந்துவிட்ட சரித்திரம் நாம் அறியாததல்ல. இதில் யாரையும் குறை கூறிப் பயனில்லை. ஏன் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் இவை தான் இறுதியாக தீர்க்கப்பட்ட தீர்முடிவுகள் என்று இதுவரை உச்சநீதிமன்றத்  தீர்ப்புக்கள் ஒரே தொகுப்பாகத் திரட்டப்பட்டதில்லை.

சட்டப் புத்தகங்களும் சட்ட இதழ்களும் உச்ச நீதிமன்றத்தால் இயம்பப்பட்ட தீர்ப்புக்களை பதிப்பிப்பதோடு சரி. அத்
தீர்ப்புகளை பொருள்வரியாகத் திரட்டித்தருவதில்லை. முல்லா போன்ற மிகப் பிரபலமான சட்ட அறிஞர்களின் புத்தகங்கள் கூட எத்தனை முறை புதிய பதிப்பாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டாலும் அப்புத்தகங்கள் அப்பொருள் குறித்த எல்லா உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் உள்ளடக்கி யவையாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

ஆக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எப்படித் தெரியப்படுத்துவது?

என் சிற்றறிவுக்கு தோன்றுவது இதுவே. உச்ச நீதிமன்றம் துவக்கப்பட்ட ஆண்டான 1950 முதல் குறைந்த பட்சம் 2010 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தால் பகரப்பட்ட எல்லாத் தீர்ப்புகளையும் முதலில் வகைப்படுத்த வேண்டும். அதன்பிறகு அத்தீர்ப்புகளிலிருந்து இறுதியாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புக்களை மட்டும் திரட்டி அவைகளை சட்டம், சட்டப் பிரிவு, சட்டக் கோட்பாடு மற்றும் பொருள் வாரியாகப் பிரிக்க வேண்டும். பிறகு அந்த வகைத் தீர்ப்புகளை settled cases, over ruled cases, cases dissented with, cases distinguished, cases pending for reference by larger bench என்று வகைப்படுத்தி ஒரு தீர்ப்புத்திரட்டாக வெளியிடப்பட வேண்டும்.

அதன் பிறகு உள்ள காலகட்டத்திற்கு ஒவ்வொரு 3 வருட இடைவெளியில் அதன் தொடர் பாகங்களை வெளியிட வேண்டும். இதை உச்ச நீதிமன்றமே முன்னெடுத்துச் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தகுதியான நீதியரசர்களைக் கொண்ட ஒரு law compilation committee அமைத்து இப்பணிகளை செவ்வனை ஏற்று நடத்தலாம் என்று தோன்றுகிறது.

சாத்தியம் தானே?