Monday, 21 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-26

நீதிமன்றங்களிலிருந்து வழக்காடிகள் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையையும் இதர தொகைகளையும் பெறுவதற்கென்று தற்போதுள்ள நடைமுறைகள் மாற்றப்படும் நேரம் எப்போதோ வந்தாகிவிட்டது. குறிப்பாக நிலம் கையகப்படுத்தல் குறித்த வழக்குகளிலும் வாகன விபத்து பற்றிய வழக்குகளிலும் அரசோ, காப்பீட்டு நிறுவனமோ தீர்ப்புத் தொகையைச் செலுத்தவும் அதை வழக்காடிகள் பெற்றுக் கொள்ளவும் தற்போது பின்பற்றப்படும் வழிமுறைகள் மிகச் சிக்கலானவை. அதிகமாகக் காலம் தாழ்த்தவல்லவை. காரணம், அவை பழைய வங்கி நடைமுறைகளை இன்றும் பின்பற்றுவதே.

ஒரு நிறுவனம் தீர்ப்புத் தொகையை வட்டியோடு நீதிமன்றத்தில் தற்போது காசோலைகள் மூலமே செலுத்த இயலும்.
அத்தொகையை அந்த நீதிமன்றம் வைப்பீடாக மாற்றி வங்கியில் இட்டு வைக்கிறது. அத்தொகையை வழக்காடிகள் பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி சீக்கிரம் கிடைத்தால் கூட அதை ரொக்கமாக அவர்கள் தங்கள்  கையில் வாங்குவதற்குள் வங்கி, கருவூலம் மற்றும் நீதிமன்றங்களின் நடைமுறைகள் அவர்களை வெகுவாக அலையவைக்கின்றன. நவீன வங்கி பணப் பட்டுவாடா நடைமுறைகளை நீதிமன்றங்கள் இன்னும் பின்பற்றும் வகையில் விதிகள் திருத்தப் படாமல் இருப்பது தான் இதற்கு முக்கியமான காரணம்.

National Electronic Fund Transfer, on line transfer, RTGS என்று எத்தனையோ நவீன மற்றும் விரைவான மின்னணு நடைமுறைகள் வங்கிகளால் எப்போதோ நம் நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட பின்பும் நீதிமன்றங்கள் மட்டும் இன்னும் பின்தங்கியிருப்பது ஏன் என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.

ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற அளவிலும் கணிணி செயல்பாடு தெரிந்த court managers நியமிக்கப்பட்டு CAOக்கு நிகராக ஊதியம் பெறுகிறார்களே, அவர்களின் பங்களிப்பு என்ன? National Informatics Center அதிகாரிகளின் பங்களிப்பு என்ன?

ஒரு வழக்காடிக்கான  தீர்ப்புத் தொகையை அரசோ, சம்பந்தப்பட்ட நிறுவனமோ NEFT etc வழியில் அந்த நீதிமன்றத்தின் வங்கிக் கணக்கிற்கு உடனே அனுப்பலாம். அத்தொகையை அந்த வழக்காடியின் வங்கிக் கணக்கிக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றத்தின் வங்கி உடனே அனுப்பலாம். எல்லாம் ஒரே ஒரு க்ளிக் மூலம்தான்.

இதனால் மிச்சமாவது , பொன்னான நேரம் மட்டுமல்ல. அதைவிட அரிதாகிவிட்ட மரக்கூழாலான காகிதக் குவியல்களும்தான்.

எல்லாவற்றையும் விட வழக்காடிகளின் தொகையிலிருந்து அவருக்குத் தெரியாமல் தனது 'அரிமாப் பங்கை' எடுத்துக் கொண்டு விட்டு மீதியை மட்டும் தனது கட்சிக்காரருக்கு கொடுக்கும் சில வழக்குரைஞர்களின் மோசடியைத் தவிர்க்கலாம்.

It is not too late to amend the civil rules of practice with relating to deposit and withdrawal of money.

No comments:

Post a Comment