Thursday, 17 March 2016

பழைய காகிதங்களிலிருந்து- எங்கேயோ கேட்ட குரல்

உனக்கான ஒரு கடிதத்தை
எழுதும் வசமான
ஒரு வாய்ப்புக்காக
காத்திருந்தேன்.
நாட்கணக்கில்.

சொல்லி மகிழவும்,
பகிர்ந்து கொள்ளவும்
சொல்லாது அழவும்
சேதிகளை
நினைவிடுக்குகளில்
சேர்த்தும் வைத்திருந்தேன்.

நான் சொல்லுவதை
எல்லாம் நீயும்
ரசிப்பாய்.
எனக்குத் தெரியும்.

எதைப் பார்த்தாலும்
எதை வாசித்தாலும்
உன்னோடு சேர்ந்தே
பார்க்கிறேன்.
ரசிக்கிறேன்.

ஒன்றாகப் பழகியும்
பேசியும் கழித்த
பொன் பொழுதுகள்
நினைவகத்தை
அழுத்தித் தட்டும்போது
இன்னும் அதிகமாக
உன்னை இழக்கிறேன்.

உனக்கு ஏதாவது
எழுதவேண்டும்
என்று தினம் தினம்
எத்தனித்தேன்.

என்ன காரணம் காட்டி
எழுதலாம்
என்பது தெரியாது
நின்ற போதிலும்
என் மனதில் நீதான்
நிற்கின்றாய்.

இப்போது உணர்ந்துவிட்டேன்.
உனக்காக நான் ஏதும்
எழுதுவதற்கு என்ன
தனியான காரணம்
எனக்கு வேண்டும்?

நீ என்னவள்
என்பதை விட?

2 comments:

  1. Some friendships last alifetime.Some others are friendships of a lifetime.

    ReplyDelete
  2. Some friendships last alifetime.Some others are friendships of a lifetime.

    ReplyDelete