தென்றலும் தேங்கலாம். காற்றும்தான் காக்கலாம். புயலென்றும் பொறுத்திடுமோ பூமியிலே.
வசந்தம் கடந்தது.
வருடமும் கழிந்தது.
வாழ்வது நிற்குமா இனிமேலே.
மறுநாள் என்றே
திருநாள் பார்த்தால்
நாட்கள் காக்குமா அவனியிலே.
வரும்நாள் நினைப்பில்
இதுநாள் தூங்கினால்
புதுநாள் கிடைக்குமா புவியினிலே.
காரியம் கிடக்குது.
கடன்கள் இருக்குது.
கடைமையும் அழைக்குது இனிமேலே.
இருளுக்குப் பின்னால்
விடியலும் பிறக்கும்
இமைகளைத் திறப்பாய் இளநெஞ்சே.
சாதனை நிகழ்த்திட
சாத்தியம் இருக்குது
வாழ்ந்திடக் கற்றிடு வாலிபனே.
வாழ்த்தும் வசவும்
என்றுமே பொருட்டா
பயணத்தைத் துவக்கு இப்போதே.
No comments:
Post a Comment