Sunday, 6 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-11A

இப்பதிவுத் தொடரின் 11ம் பாகத்தில் திருமணத்திற்கு முன் முழு உடற் பரிசோதனை முறைப்படி இரு தரப்பினரும் செய்து கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்துருவை வலியுறுத்தியிருந்தேன்.  அதற்கு வந்த பின்னூட்டங்கள் பல விதமானவை.
ஜாதகப் பொருத்தத்தை விட மருத்துவ பரிசோதனையே இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிவிட்டது என்பதைப் பலர் ஆதரித்தனர். குறிப்பாக
அலைபேசியில் பேசி.

சமீபத்தில் நான் சந்தித்த ஒரு பெண்ணின் வாழ்வும் என் கருத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகிறது.

அப்பெண்ணுக்கு திருமணமான அன்றே எழுந்த ஒரு அய்யம் மறுவாரமே உண்மை என்று தெரிகிறது. அவரின் கணவர் தாம்பத்திய உறவுக்கு லாயக்கற்றவர்.

அடுத்த இடி மறுவாரமே விழுகிறது. அவர் ஒரு தீர மன நோயாளியும் கூட.  கடந்த பத்து வருடங்களாக அவ்வியாதிக்கு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அனைத்தையும் மணமகன் வீட்டார் தெரிந்தே மறைத்து அத்திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

இதையல்லாம் பார்த்தால் இன்னொன்றும் தோன்றுகிறது.

அவ்வாறான உடற்பரிசோதனையை கட்டாயமாக்குவதோடு,
இப்படிப் பொய் சொல்லி உண்மையை வேண்டுமென்றே மறைத்து மோசடியாகத் திருமணம் செய்யும் செய்கை ஒரு மனிதனின் வாழ்வுரிமையைப் பறிப்பது  தானே?  குற்றமுறு செய்கை தானே?

அதை ஒரு குற்றம் என்று தெளிவாகச் சட்டம் இயற்றி சம்பந்தப்பட்டவர்களை கடுமையாகத் தண்டித்தால் தான் என்ன?

No comments:

Post a Comment