அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார் மகள். காலை மணி 6.00. நடைப்பயிற்சிக்கு துணைக்கழைப்பதற்காக அவரது உறக்கத்தைக் கலைக்கிறேன்.
'இன்னும் கொஞ்ச நாள் தானே அப்பா, ப்ளீஸ். கொஞ்ச நேரம் மட்டும் தூங்கிக்கிறேனே' என்று உறக்கத்தினூடே கெஞ்சுகிறார் மகள். ஏதும் புரியாமல் மனைவியைப் பார்க்கிறேன்.
'இது கூடத் தெரியாதா உங்களுக்கு?' என்கிறார் அவர். '12ம்வகுப்புக்கான பாடங்கள் துவங்கியாச்சு. 11வது வகுப்புக்கான தேர்வு முடிந்து கொஞ்சம் நாள்தான் ஆகிறது. தினமும் அதிகாலையில் கண்விழித்து தேர்வுக்குப் படித்த குழந்தைக்கு ஓய்வு வேண்டாமா? இன்னும் ஒரு வருடத்துக்கு
அவளுக்கு ஏது நல்ல தூக்கம்?'
இது அவரது விளக்கம்.
எனக்கு இதில் உடன்பாடில்லை.
அவருக்கோ வேறு வழியில்லை.
மதிப்பெண்களே அறிவின் ஏகமான உரை கல்லாகிவிட்ட நாடல்லவா இது? என்ன செய்ய?
அறிவைத்தேடுவதைத் தவிர வேறொன்றும் அறியாத கல்வி முறையில் தமது சிறார் பருவத்தைத் தொலைக்கும் மாணவர்கள்...
பொருள் தேடுவதைத்தவிர வேறெதுவும் நினைக்காத கணவன்கள்...
இருவருக்கும் நடுவில் தனக்கென ஏதுமின்றி தவிக்கும் மனைவிகள் .....
எல்லா இல்லங்களிலும் இதுதான் நிலைமை என்றால், என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?
No comments:
Post a Comment