பாதை மறந்து
எங்கோ மோதி
எங்கோ வீழ்ந்து
மழையோடு புரண்டு
மண்ணோடு
மக்கிய
சருகானது காதல்.
சரிதான்.
எல்லா மொட்டும்
மலர்வதில்லை.
எல்லாப் பூவும்
காய்ப்பதில்லை.
எல்லாக் காயும்
கனிவதில்லை.
தனக்கான பூவுக்காக
வண்டுகளோ
வரப்போகும்
வசந்த காலத்திற்காக
தென்றலோ
காத்திருப்பதில்லை.
மனதோடு மரணிக்கும்
காதலும் அவ்வாறே.
அன்பு பருவமற்றது.
அன்பு சாவற்றது.
வெட்ட வெட்டத்
துளிர்ப்பது.
தொலைந்த காதலோ,
தொலைத்த காதலோ,
எதுவும்
அன்பின்
இறுதி யாத்திரை
அல்ல.
துணையின் மனதில்
துளிர்க்கும் அன்பும்
இதமான நட்பும்
சுகம் தரும் சுகந்தமும்
காதலன்றி வேறேது?
In this deluding world the only thing which steers u forward is love ! That was a beautiful kavithai!
ReplyDeleteThank.u
DeleteThank.u
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete