சில மாதங்களுக்கு முன்பு.
மதுரை உயர் நீதிமன்றம்.
கண்டிப்புக்கு பெயர்பெற்ற அந்த
நீதியரசரின் நீதிமன்ற அறை. அவர் இளம் வழக்குரைஞர்களை ஊக்குவிக்கும் மனம் படைத்தவர்.
அவரிடம் ஒரு வழக்கை நடத்திய ஒரு இளம் வழக்குரைஞரிடம் அவர் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவைப் பற்றிக் கேட்டார். அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. இதையெல்லாம் பார்க்காமல் ஏன் வழக்கை நடத்தவேண்டும் என்று கடிந்து கொண்ட அந்த நீதியரசர் அந்த வழக்கறிஞருக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுத்து MMBA பார் அஸோஷியேஷனில் உள்ள இ லைப்ரரிக்குச் சென்று அந்த சட்டப்பிரிவைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு திரும்ப வந்து வழக்கை நடத்தும்படி உத்தரவிட்டார்.
அங்கிருந்த என்னைப் பார்த்து அந்த இளம் வழக்குரைஞருக்கு எங்கள் சங்க நூலகத்தில் தேவையான உதவிகளைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். நானும் எங்கள் வழக்கறிஞர் சங்கத்திற்கு செல்லிடப் பேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த வழக்குரைஞருக்கு ஆவன செய்யும்படி சொன்னேன்.
வெளியே வந்தால் அந்த இளம் வழக்கறிஞர் தன்னுடைய அங்கியை கழற்றிவிட்டு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.
' எங்க சார்?'
' வீட்டுக்குத் தான்!'
'என்ன சார், reference books பார்க்கலயா? என்று கேட்டேன். 'இன்னும் ஒரு மணியில உங்க கேசை எடுப்பாரே' என்றேன்.
'வேற வேலையில்லை..போங்க சார்' என்று சொல்லிவிட்டு coolers- ஐ அணிந்து கொண்டு விர்ர்ரெனக் கிளம்பிவிட்டார்.
நி்ற்க.
இங்கே நான் ஒரு flashback பற்றி சொல்லியாக வேண்டும்.
1989 ஏப்ரல்.
வழக்குரைஞராக நான் சென்னை உயர்நீதி மன்றத்தில் நுழைந்த முதல் நாள். King & Partridge சட்ட அலுவலகத்தில் பணி. மதியம் 1.30 மணி இருக்கும். சீனியர் என்னை அழைத்து ஒரு முரட்டு வழக்குக் கட்டை என்னிடம் கொடுத்து 'மதியம் லஞ்ச்மோஷன் கேஸ். MP for ABJ. You move it' என்றார். எனக்கு
மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. நான்கு வாய் சாப்பாட்டை அள்ளிப் போட்டுக் கொண்டு 2 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு போய்விட்டேன்.
டாண் என்று 2.15க்கு அந்த நீதியரசர் வந்தார். அவரைப்பற்றி பக்கத்தில் இருந்த வக்கீல் சொன்னதைக் கேட்டு வயிறெல்லாம் HCl மயம்.
கேட்டார். சொன்னேன்.
அடுத்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.
நான் அம்பேல்.
' The Plaintiff bank is at Madras. The property to be attached now by this court is at Nagpur. How to execute the warrant of attachment?'
இது தான் கேள்வி். எனக்கு பதில் தெரியவில்லை. என் முகம் அவருக்குப் பாவமாக இருந்திருக்க வேண்டும்.
' How old are you in the bar?
' This is very first day milord'
' It is OK. I will give you an hour's time. Go to the library. Search the law. Come back and answer me. Don't ask any one until you find the answer...OK?
முதல் நாள். அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தில் எது எங்கே இருக்கிறது என்பதே தெரியாது. அங்கே இங்கே ஓடி யார் யாரையோ கேட்டு ஒரு வழியாக ஒரு நூலகத்தைக் கண்டு பிடித்து, அனுமதி வாங்கி, சட்டப் புத்தகங்களைப் புரட்டி.....அப்பாடா!
பத்தாவது நிமிடத்தில் முல்லா புண்ணியத்தில் விடை தெரிந்தது.
'Precept.'
அருகில் படித்துக்கொண்டிருந்த ஒரு வழக்குரைஞரிடம் தயங்கித் தயங்கி அது சரியா என்று கேட்டேன்.
விவரம் கேட்டார். அனைத்தும் சொன்னேன். 'சரி தான்' என்றார். Thank God என்று இருந்தது.
'Let us go...' என்ற படி அவரும் என்னுடன் கோர்ட்டுக்கு வந்தார். மிகச்சரியாக ஒரு மணி நேரம் கடந்து என்னை நீதிபதி பதில் கேட்க, நான் சொல்ல, 'good...keep it up' என்றார். A Conditional order was passed.
' How come she is here?' என்றார் சிரித்துக்கொண்டே என்னோடு வந்த அந்த வழக்கறிஞரைப் பார்த்து.
'No milord, he got the point answered from the book and he got it confirmed from me. That is all' என்றார் அந்த வழக்குரைஞர்.
Golden days. Gem of people.
அந்த நீதியரசர்: Justice M. Srinivasan.
அந்த வழக்குரைஞர்:
Sumathi Venkatachari
Back to Madurai.
Quo vadis?
No comments:
Post a Comment