மானாமதுரை முன்சிப் நீதிமன்றத்தில் பணிபுரிந்த ஒரு நீதிபதி தன் முன்பு சாட்சியம் அளிக்க சாட்சிக் கூண்டில் சாட்சியாளர் நிற்கும் போது அவர்களிடம் 'சத்தியமாய்ச் சொல்றேன்' என்று மற்ற எல்லா நீதிமன்றத்தில் ஒரு சடங்கு மாதிரி செய்வது போலச் பெயருக்கு சத்தியப் பிரமாணம் செய்ய மாட்டார்.
பகவத் கீதை புத்தகம் ஒன்றின் மீது சாட்சி கை வைத்து 'நான் இப்போது சொல்லப் போவதெல்லாம் உண்மையே...உண்மையைத் தவிர வேறல்ல' என்று சத்தியப்பிரமாணம் செய்யச்சொல்லி சாட்சியம் பதிவு செய்ததை பல முறை நான் பார்த்திருக்கிறேன். உடனே சகிப்புத்தன்மை குறித்து யாரும் ஆவேசப்பட்டு எழுதிவிட வேண்டாம். ஏன் என்றால்
அந்த நீதிபதி ஒரு இந்து மதத்தினரே அல்லர். அவர் அந்தந்த மதத்தினரின் புனித நூல்களை வைத்து மாற்று மதச் சாட்சிகளிடம் சத்தியப் பிரமாணம் வாங்கினாரா? கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களிடம் எந்த நூலின் (திருக்குறள்?) மேல் பிரமாணம் வாங்கினார்? அவ்விவரம் நேரில் பார்த்திராததால் நான் அறியேன். மானாமதுரை வழக்குரைஞர்கள்
யாராவது அது குறித்து கருத்துச் சொல்வார்கள் என நம்புகிறேன்.
அது குறித்த சட்ட விதிகளை ஆய்வதற்கு கால அவகாசம் வேண்டும். கோடை விடுமுறை வரட்டும். அல்லது 'அதனை அவன் கண் விடல்' என்ற வள்ளுவர் வாக்குப் படி நண்பன் Prabhu Rajadurai யை அணுகலாம் என நினைக்கிறேன்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு தமிழன், அதுவும் ஒரு இந்து, அமெரிக்க தலைமை நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியேற்கும் போது பகவத்கீதையை வைத்து பிரமாணம் செய்ததாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிச் செய்தியில் பார்த்தேன்.
வதந்திகளும் புனைகதைகளும்
இறக்கை கட்டிக்கொண்டு உலகமல்லாம் ஒளிவேகத்தில் பறக்கும் காலத்தில் இச் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
அது உண்மையே என்றால் இங்கே அதன் தாக்கம் எப்படி இருக்கும்? ஒரு வேளை இதே மாதிரி நம் நாட்டில் நடந்தால்? என்னவெல்லாம் நடந்திருக்கும்? எப்படியெல்லாம்
அது பேசப்பட்டிருக்கும்?
யார் யார், எப்படி எல்லாம் இதைப் பற்றியும் எதிர்த்தும் உணர்ச்சிப் பிரவாகமாகப் பேசியிருப்பார்கள் என்றெல்லாம் guess செய்து எழுதுங்கள் என்று ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு யாருக்கு கிடைத்திருக்கும் என்று உங்களால் கணிக்க முடியுமா? ஆம் என்றால்,
please hurry up your answer and win an attractive prize..
http://www.newsmobile.in/articles/2016/02/16/indian-judge-in-us-top-court-swears-on-bhagavad-gita/
No comments:
Post a Comment