Sunday, 28 February 2016

அவனுக்கு ஏது மதம்?

http://m.tamil.thehindu.com/india/சாலை-விபத்தில்-உடல்-2-துண்டானபோதும்-உறுப்பு-தானம்-செய்ய-கெஞ்சிய-இளைஞர்/article8249534.ece
-----

பகிர மனமில்லைதான்.
ஆனாலும்
அங்கே துடித்தது
ஒரு மெய் மட்டுமல்ல.
மனிதம் என்ற
பொய்யும் தான்.

பிரிந்தது ஓர்
உடல் மட்டும் அல்ல.
மனிதன் கைவிட்ட
அபிமானமும் தான்.

அவன் குருதிக்கு
இனி இல்லை வகைப்பாடு.
அவன் தான் இப்போது
அதுவாகி விட்டானே,
இனியும் அவனுக்கு
மதமுண்டா நண்பர்களே?
இனமுண்டா அன்பர்களே?

அவனும் மனிதனாகத்தான்
நேற்று வரை
ரத்தமும் சதையுமாய்
நடமாடினான்.

என்ன செய்ய?

நம்மிடையே
அவனைப் போல
மனிதன் இன்னும்
அரிதாய்
வாழத்தான் செய்கிறான்.
ஆனாலும் தான்
ஒரு மனிதன் என்பதை
அவன் செத்துத்தான்
மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment