இதோ
உணவுமின்றி
உணர்வுமின்றி
ஒரு மனிதன்.
இப்போதே
சாகப் போகும்
தனி மனிதன்.
அவன் சாகக்
காத்திருக்கும்
வல்லூறு.
மெளனமாய்
மரித்துப் போன
மனிதம்.
போடா பாரதி...
எரிதழலும் எங்கே?
ஜகத்தினை அழிப்பதும் எங்கே?
வா மனிதா,
சூப்பர் ஸ்டார்ஸ் படம் பார்த்து
எல்லாம் மறப்போம் வா...
No comments:
Post a Comment