இன்றும்
நினைத்தாலே
இனிக்கிறது
சிறுவனாக
கொண்டாடிய
தீபாவளி.
காலம் மாற
காட்சிகளும் மாற
அந்த கொண்டாட்டம்
இன்று இல்லைதான்.
ஆயினும் இது
வேறு வகை உவகை.
நாள் முடிந்து அகமகிழ்ந்து
மகள் உறங்க நான் மட்டும்
பின்னோக்கிப் பார்க்கிறேன்
விழித்தபடி.
எம் நாட்கள் ஏன்
இவர்களுக்கு கிட்டாது
போனதென ஏக்கமாய்
கண் துயிலும் பொழுதில்
தொலைந்து போனான்
நரகாசுரன்
தொலைக்காட்சியில்.
No comments:
Post a Comment