Sunday, 28 February 2016

சுகம்

குயிலென்னவோ
சுகமாகத்தான்
கூவுகிறது.
அது
மனிதனுக்கு மட்டும்
சோகமாகக் கேட்கிறது.

இயற்கையின் படைப்பில்
சிரிக்கத்தெரிந்தது
மனிதன் மட்டுமென
நமக்கு பெருமிதம்.

ஆயின்
இங்கே
அழுவதும்
அழ வைப்பதும்
வேறு யாராம்?

அடே மானிடா,
குயிலின் குரலுக்கு
சோகம் சேர்ப்பதை
நிறுத்து.
உன் மனதிற்கு
சுகம் சேர்த்துவிடு.

உலகம் அழகானது.
உயிர்கள் இனியன.

No comments:

Post a Comment