Saturday, 27 February 2016

Sujathoughts

சுஜாதா @ ரங்கராஐன்.

தமிழ் எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்.
நிரந்தர.

அந்த சிங்காதனம் சும்மா கிடைத்துவிடவில்லை. அது அவரது அசுர உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

அவர் தொடாத சப்ஜக்ட் என்று என்ன பாக்கி இருக்கிறது?

சிறுகதை.
குறுநாவல்.
நெடுங்கதை.
நாடகம்.
திரைக்கதை, வசனம்.
வெண்பா.
ஆன்மிகம்.
பக்தி.
பாசுரம்.
சங்க இலக்கியம்.
Science Fiction.
நாட்டுப்புறப் பாடல்கள்.
இலக்கிய விசாரம்.
அறிவியல் கட்டுரைகள்.
வார இதழ் ஆசிரியம்.
கேள்வி பதில்.
Etc......

அவர் தொடாத உச்சமும் இல்லை.

அவரது ஆழமான அறிவும் ஈடுபாடும் அசாதாரணமானது.

ஆரம்பத்தில் வந்த கணையாழியின் கடைசிப் பக்கங்களும் இறுதியில் வந்த கற்றதும் பெற்றதும் அவரது பரந்த அறிவுக்கு சாட்சி.

கதையில் கோர்ட் சீன் ஒன்று வந்தால் AIR 1978 SC page என்று case laws களும் கூட வரும்.

அவரது முதல் கதையான நைலான் கயிறு-வில் குறுக்கு விசாரணைக் கட்டங்கள் அசத்தும்.

அவரின் எழுத்தில் இருக்கும் எளிமையும் புதுமையும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

கரையல்லாம் செண்பகப் பூ என்னை ஒரு வாரம் தூங்கவிடவில்லை.

இணைய வசதி இல்லாத போது வந்த அவரது நில்லுங்கள் ராஜாவே சொன்ன mind control யுக்திகள் அக்காலத்தில் அசாத்தியமான அறிவியல் ஆச்சரியம். அது இன்றைக்கும் ஒரு நல்ல சினிமாவுக்கு லாயக்கான த்ரில்லர்.

ப்ரியா ஒருவகை.
டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு ஒருவகை.
கடவுள் கட்டுரைத் தொகுப்பு ஒருவகை.

கொலையுதிர்காலம் வேறு வகை. அதில் ஹாலோகிராம் வைத்து பேய் பிசாசு வகையறாவில் புகுந்து விளையாடியிருப்பார்.

Mens  rea என்றச் சட்டக் கோட்பாட்டை வைத்து அவர் எழுதிய எதையும் ஒரு முறை சட்டம் தெரிந்தவர்களுக்கு ஒரு பொக்கிஷம்.

Serial killer பற்றிய அப்சரா ஒரு அபாரமான திரைக்கதை.

மத்யமர் கதைகள் மறக்க முடியாதவை.

காகிதச் சங்கிலிகள் கதையில் கடைசி வரியில் ' எல்லாரும் சேர்ந்து அவரைக் கொன்னுட்டாங்க பாட்டிம்மா' என்ற வரிகளில் சுயநல உறவுக் கூட்டங்களுக்கு சாட்டையடி விழும்.

24 ரூபாய்த் தீவு, காயத்திரி, கனவுத் தொழிற்சாலை, பத்து செகண்ட் முத்தம், இளமையில் கொல், ஆஸ்டின் இல்லம், மீண்டும் ஜீனோ......அடுக்கிக் கொண்....டே போகலாம் அவர் 'போற்றி' பாட.

அவரது கதை நாயகர்களில் கணேஷ்- வசந்த் வக்கீல்கள் உலகப் பிரசித்தம். அநேகமாக வசந்த் -ஐ அந்தக் காலத்து எல்லா இளம் பெண்களும் ஒரு தடவையாவது காதலித்திருப்பார்கள்.

திருக்குறளுக்கு சுஜாதா உரை எழுதியிருப்பது தெரியுமா?
அதில் சில உரைகள் குறளைவிடச் சுருக்கம். (உம்) தீயினாற் சுட்ட வடு.

'சிலிக்கான் சில்லுகள்' மேல் பாதி பேருக்கு காதல் வந்ததே அவரால் தான்.

'ஏன் எதற்கு எப்படி' படிக்காதவர்களுக்கு உத்தரவாதமாக ஆயுள் பாதி வேஸ்ட்.

சரித்திரக்கதையும் எழுதினார். 'சிவப்பு கறுப்பு வெளுப்பு' என்று சிப்பாய்க் கலகப் பிண்ணனியில் குமுதத்தில் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்தார். நாடார் இன மக்கள் அக்கதையில் ஏதோ ஒன்றை ஆட்சேபிக்க தன்னால் வேண்டாம் சிரமம் என்று அதை நிறுத்திவிட்டு பிறகு அக்கதையை வேறு களத்தில் 'ரத்தம் ஒரே நிறம்' என்று அற்புதமாக எழுதினார்.  ஆனால் எழுதுவதை நிறுத்தவில்லை.

எல்லாம் சரி. கடைசி வரை அந்த 'மெச்சிகோ நகரத்து சலவைக்காரி' ஜோக்கை சொல்லாமலேயே செத்துப் போய்விட்டார் என்பது பெரிய வருத்தம்.

இருக்கட்டும், ஒவ்வொரு தடவையும் electronic voting machineல் எந்தப் பொத்தானை அமுக்கினாலும் அது சுஜாதாவின் அமரத்துவப் புகழுக்கான வாக்கு என்றே எனக்குத் தோன்றுகிறது.

3 comments: